வணிகம்

அதிர்ச்சி.. ஊரடங்கை அறிவித்துவிட்டு தொழிலதிபர்கள் பெற்ற ரூ,68,607 கடனை தள்ளுபடி செய்த ஆர்பிஐ!

Published

on

மக்கள் ஊரடங்கில் சிக்கி தவித்து வரும் நிலையில் 2019 செப்டம்பர் மாதம் வரை 68,607 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதில் என்ன அதிர்ச்சி என்றால் நீரவ் மோடி, விஜய் மல்லையா, மேஹூல் சோக்‌ஷி உள்ளிட்டவர்கள் பெற்ற மோசடி கடன்களும் இதில் அடங்கும்.

கடன் தள்ளுபடி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவர் 13,500 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு லண்டனில் தலைமறைவாக உள்ள நீரவ் மோடியின் மாமா பெற்ற 5,492 கோடி ரூபாய் கடனாகும். நீரவ் மோடியின் மாமா மேஹூல் சோக்‌ஷியும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று சென்றுவிட்டார். அதன் பிறகு இவர்கள் செய்த மோசடி வெளியில் வந்தது குறிப்பிடத்தக்கது.

அதை தொடர்ந்து ஆர்இஐ அக்ரோ நிறுவனம் பெற்ற 4,314 கோடி ரூபாய் கடன், வின்சொம் டைமண்ட் நிறுவனம் பெற்ற 4,076 கோடி ரூபாய் கடனும் டாப் 3 இடங்களில் உள்ளன.

சென்ற ஆண்டு திவால் ஆன ருச்சி சோயா நிறுவனத்தைப் பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி வாங்கியது. இந்நிலையில் ருச்சி சோயா பெற்றிருந்த 2,212 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடன் மோசடியில் நாட்டையே உலுக்கிய விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 1,943 கோடி ரூபாய் என தொழிலதிபர்கள் பெற்ற 68,607 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கில் மக்கள் கஞ்சிக்கு கூட வழியில்லாமல், அடுத்து என்ன ஆகும் தவித்து வரும் நிலையில், தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடி விவகாரம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த கடன் தொகைகள் எல்லாம் வாரா கடன்களாக அறிவிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version