கட்டுரைகள்

பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் அபராதம்.. சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு!

Published

on

இனி பொது இடங்களில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால் சற்று கவனமாக இருங்கள்.

சென்னையில் பொது இடங்களில் வெட்ட வெளியில் மறைவுக்கு இடம் கிடைத்தால் அங்குச் சிறுநீர் கழிப்பது தொடர்கதை.

இந்நிலையில் சென்னையில் இனி பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rs 50 Fine In Chennai If Peeing in Open Public

துப்புரவு ஆய்வாளர்கள் நகரம் முழுவதும் யாரேனும் மீறுகிறார்களா என்பதைத் தொடர்ந்து கண்காணிப்பார்கள். விதி மீறுபவர்களைக் கண்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டுப் பெயர், மற்றும் அபராதத்திற்கான காரணத்துடன் ரசீதுகளை வழங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபக்கம் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையான அளவு கழிவறைகள் இல்லை. இருக்கும் கழிவறைகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இல்லை எனப் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version