இந்தியா

வங்கி திவாலானால் வைப்புநிதிதாரர்களுக்கு எத்தனை லட்சம் கிடைக்கும்? நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

Published

on

வங்கி திவாலானால் வைப்பு நிதி வாடிக்கையாளர்களுக்கு இதுவரை ஒரு லட்சம் மட்டுமே கிடைத்து வந்த நிலையில் தற்போது அந்த தொகையை உயர்த்தி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

வங்கிகளில் வைப்பு தொகைக்கு காப்பீடு மற்றும் கடன் உத்திரவாத கழக சட்டத்தில் நேற்று மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தத்தின்படி வங்கி திவாலானால் அல்லது தடை செய்யப்பட்டால் அந்த வங்கியில் வைப்பு நிதியாக வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் ஐந்து லட்சம் வரை காப்பீடு பெறுவார்கள் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்த தொகை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்களுக்குள் கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். முன்னதாக வங்கி திவால் ஆனால் அல்லது தடை செய்யப்பட்டால் வைப்பு நிதிகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் மட்டுமே கிடைக்கும் என்றிருந்த நிலையில் தற்போது 5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காப்பீடு தொகை ஒரு லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டதால் நாட்டின் 93.5 சதவீத வைப்பு நிதி கணக்குகள் மற்றும் 50.9 சதவீத வைப்பு நிதி மதிப்பு இதற்குள் அடங்கிவிடும் என்றும், இந்தியாவில் உள்ள அனைத்து அரசு, தனியார், கூட்டுறவு மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் வைப்பு நிதிகள் டிஐசிஐசி சட்டத்தின்படி காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version