இந்தியா

பட்ஜெட் 2021: கொரோனா தடுப்பூசிக்கு 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

Published

on

மத்திய பட்ஜெட் 2021-ல், கொரோனா தடுப்பூசிக்கு 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இந்த ஆண்டுக்கான பட்ஜெட் என்பது முன்னெப்போதும் இல்லாத வகையிலான சூழலில் தயாரிக்கப்பட்டது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாம் கஷ்டபட்டது மிக அதிகம்.

கொரோனா தொற்றைப் பொறுத்தவரை இந்தியாவில் தான், மிகக் குறைவான இறப்பு விகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதார மீட்சி என்பதும் நல்ல முறையில் இருந்தது.

இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 112 பேருக்குத் தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல ஆக்டிவ் கேஸ்கள் என்பது, உலகிலேயே மிகக் குறைவாக 1.30 லட்சம் என்ற வகையில் உள்ளது. கொரோனா தொற்றை சமாளிக்க நாம் இரண்டு தடுப்பூசிகளைப் பொதுப் பயன்பாட்டுக்கு அனுமதித்துள்ளோம். இன்னும் இரண்டு தடுப்பூசிகள் சீக்கிரமே பயன்பாட்டுக்கு வரும்.

நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என்னும் காரணத்திற்காக, இந்த ஆண்டு பட்ஜெட்டில் 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்’ என்று கூறியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version