தமிழ்நாடு

சென்னையில் ரூ.300 கோடி கோயில் நிலம் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்!

Published

on

திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே கோவில் நிலங்கள் மீட்பு நடவடிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை சுமார் 500 கோடிக்கும் மேல் மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த நிலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ 300 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலை மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இன்று சென்னை கீழ்பாக்கத்தில் இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது அவர் சென்னையில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 49 கிரவுண்ட் நிலம் மீட்கப்பட்டதாகவும் இதன் மதிப்பு சுமார் 300 கோடி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த அலுவலகங்கள் கட்டிடங்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களில் இன்னும் மீதம் இருக்கின்ற ஆக்கிரமிப்பு நிலங்களையும் மீட்போம் என்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்

ஆன்மீகம் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு நிலத்தை ஊடுருவ நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களின் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படும் என்றும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் யாருடைய கையில் இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version