தமிழ்நாடு

ரூ.250 கோடி டெண்டர்கள் ரத்து: சென்னை மாநகராட்சி அதிரடி!

Published

on

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆட்சி தொடங்கியதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ரூபாய் 250 கோடிக்கு ஆன டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களில் மட்டும் சென்னை மாநகராட்சி ரூபாய் 250 ரூபாய் மதிப்பிலான டெண்டரை ரத்து செய்துள்ளது. சென்னையை சீரமைக்கும் வகையில் சாலை மேம்பாடு செய்தல், பூங்காக்கள் மற்றும் மழைநீர் வடிகால் புனரமைப்பு செய்தல் போன்ற பணிகளுக்காக ஒப்பந்தகாரர்கள் இடம் பணி வழங்கப்பட்டு இருந்தது.

சென்னை மாநகராட்சி வழங்கிய இந்த டெண்டரில் சரியான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என புகார்கள் எழுந்த நிலையில் இந்த புகார்கள் குறித்து சென்னை மாநகராட்சியின் குழு ஒன்று ஆய்வு செய்தது. அடையாறு, அண்ணா நகர், கோடம்பாக்கம், ராயபுரம் ஆகிய 43 பகுதிகளில் மழைநீர் வடிகால் சீரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளுக்காக கடந்த பிப்ரவரி மாதம் 120 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி மேலும் 15 மண்டலங்களில் 120 கோடி ரூபாய் மதிப்பில் 1500 ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்ட ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் சமூக வலைதள பக்கங்களில் பராமரிக்க 2 கோடி மதிப்பில் விடப்பட்ட ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து சென்னை மாநகராட்சி அதிரடியாக டெண்டரை ரத்து செய்தது என்பதும் ஒரே வாரத்தில் சுமார் 250 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பணிகளை சென்னை மாநகராட்சி ரத்து செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version