தமிழ்நாடு

மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.2000 அபராதம்!

Published

on

மாஸ்க் அணியாதவர்கள் ஏன் கைது செய்யக்கூடாது என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

கோவிட்-19 காலத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது குறித்து கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு ஒன்றைத் தொடுத்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாஸ்க், கையுறை அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது மற்றும் தீர்வாகுமா என்று கேள்வி எழுப்பினர். மேலும் அவர்களை ஏன் கைது செய்யக்கூடாது.

மாஸ்க் அணியாதவர்களுக்கு 100 ரூபாய் என்றுள்ள அபராத தொகையை, 2000 ரூபாயாக உயர்த்தலாம். முகக் கவசம், கையுறை அணிவதை கட்டாயமாக்கலாம்.

பொதுவெளியில் மாஸ்க் அணியாமல் வருபவர்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருப்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version