தமிழ்நாடு

குடும்பத் தலைவர் இயற்கையாக உயிரிழந்தால் ரூ.2 லட்சம்- தமிழக அரசு அறிவிப்பு!

Published

on

தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார் தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம். இன்றைய பட்ஜெட்டில் குறிப்பிடத்தகும் வகையில், மாநிலத்தில் உள்ள குடும்பத் தலைவர் இயற்கையாக மரணமடைந்தால் அவரது குடும்பத்துக்கு இரண்டு லட்ச ரூபாய் காப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பன்னீர்செல்வம் அறிவிப்பில், ‘தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர் இயற்கையாகவே உயிரிழந்தால் 2 லட்ச ரூபாய் காப்பீடு தொகை வழங்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

பட்ஜெட்டில் வெளிவந்த முக்கிய அறிவிப்புகள்:

* நீர்வள ஆதாரத் துறைக்கு 6,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* வேளாண்மைத் துறைக்கு 1,738 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* மீன்வளத் துறைக்கு 580 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* நீதித்துறை நிர்வாகத்துக்கு 1,437 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* 1,580 கோடி ரூபாயில் மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்

* பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு 3,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* நெடுஞ்சாலை துறைக்கு 18,750 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* காவல் துறைக்கு 9,567 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* தீயணைப்பு துறைக்கு 436 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* பயிர்க்கடன் தள்ளுபடி ரூ.5,000 கோடி ஒதுக்கீடு!

* 6 முதல் 10ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம்!

* கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு

Trending

Exit mobile version