தமிழ்நாடு

கோடிக்கணக்கில் பணம், ஹார்ட் டிஸ்க், மொபைல் போன் பறிமுதல்: தங்கமணி ரெய்டில் பரபரப்பு!

Published

on

முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி அவர்கள் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர் என்பதும் அதிகாலை 6.30 மணியிலிருந்து 69 இடங்களில் நடந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

குறிப்பாக தங்கமணி வீட்டிலிருந்து ரூ.2.16 கோடி பணம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாகவும் அதுமட்டுமின்றி ஹார்ட் டிஸ்க்குகள், மொபைல் போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் முன்னாள் அமைச்சர் தங்கமணி கோடிக்கணக்கில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருப்பதாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்திருந்த நிலையில் அது குறித்த ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று காலை முதல் ஒரே நேரத்தில் 69 இடங்களில் நடந்த இந்த சோதனை ஒரு சில இடங்களில் முடிவுக்கு வந்துள்ளதாகவும் இன்னும் ஒரு சில இடங்களில் சோதனை தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version