சினிமா செய்திகள்

சந்தா கட்டியிருந்தாலும் ரூ.199 கட்ட வேண்டும்: அமேசான் ஓடிடி அதிரடி அறிவிப்பு!

Published

on

அமேசான் ஓடிடிக்கான வருட சந்தா கட்டி இருந்தாலும் கேஜிஎப் 2 படத்தை பார்க்க வேண்டுமென்றால் 199 கட்டணம் மறுபடியும் கட்டணம் செலுத்த வேண்டுமென அமேசான் ஓடிடி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

சமீபத்தில் வெளியான நடித்த ’கேஜிஎப் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் 1,100 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனை செய்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் விரைவில் அமேசான் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை அமேசான் ஓடிடியில் பார்க்க வேண்டுமென்றால் சந்தாதாரர்கள் ஆக இருந்தாலும் சந்தாதாரராக இல்லாவிட்டாலும் 199 ரூபாய் கட்டணம் கட்டவேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் சந்தாதாரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கேஜிஎப் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை 350 கோடி கொடுத்து அமேசான் வாங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Trending

Exit mobile version