இந்தியா

வெள்ள நிவாரண முகாம்களில் இருந்து வீடு திரும்புபவர்களுக்கு 16,000 ரூபாய் வழங்கப்படும்: பினராயி விஜயன்

Published

on

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்ட மிகப் பெரிய வெள்ளப்பெருக்கில் 300-க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

தற்போது வெள்ளம் மடிந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் வெள்ள நிவாரண முகாம்களில் இருந்து வீடு திரும்புவோர் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 16,000 ரூபாய் அளிக்க இருப்பதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வெள்ளிக்கிழமை கேரள வெள்ளத்திற்கு முல்லை பெரியார் அணையைத் தமிழ் நாடு அரசு திறந்து விட்டதே காரணம் என்று தெரிவித்து இருந்தார். ஆனால் சில நாட்களுக்கு முன்பு தமிழ் நாடு அரசு முல்லை பெரியார் அணையின் நீர் மட்டத்தினைக் குறைக்கக் கோரிக்கை வைத்தது அவரே ஆவார்.

பினராயி விஜயனின் இந்தச் சர்ச்சைக்குள்ளான கருத்து தமிழக மக்கள் இடையில் பெறும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version