இந்தியா

தமிழகத்தில் மோடியின் திட்டத்தில் ரூ.119 கோடி மோசடி!

Published

on

தமிழகத்தில் பிரதம மந்தியின் விவசாயிகள் உதவி திட்டத்தில் 119 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது.

2019-2020 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த போது மத்திய அரசு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் என மூன்று தவணையாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பிரதமரின் விவசாயிகள் உதவி திட்டத்தில் தமிழகத்திலிருந்து 5.5 லட்சம் பொலி கணக்குகள் கண்டறியப்பட்டு, அதன் மூலம் 110 கோடி ரூபாய் வரை மோசடி நடைபெற்றுள்ளது அம்பலமாக்கியுள்ளது.

இதுவரை போலி விவசாயிகள் வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு 32 கோடி ரூபாய் வரை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டம் கீழும் பல கோடி ரூபாய் மோசடிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன,

எனவே இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்,

Trending

Exit mobile version