தமிழ்நாடு

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000.. நாளை வெளியாகும் மாஸ் அறிவிப்பு

Published

on

சென்னை: குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் நாளை அறிவிக்கப்பட உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதில் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் நாளை அறிவிக்கப்பட உள்ளது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒரு வாக்குறுதி குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் ஆகும். மாதம் 1000 ரூபாய் கொடுக்கப்படும் இந்த திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. தமிழ்நாடு பொருளாதார நிலை காரணமாக திட்டம் தொடங்கப்படவில்லை.

கடந்த அதிமுக ஆட்சியில் கஜானா காலியானதால் திட்டம் தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் கொஞ்சம் சீரடைந்து வருகிறது. இதையடுத்து மார்ச் மாத பட்ஜெட்டில் இந்த திட்டத்தை அறிவிப்போம் என்று தமிழ்நாடு அரசு கூறி உள்ளது.

மார்ச் பட்ஜெட்டில் இந்த திட்டம் பற்றிய அறிவிப்பு இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தனது அறிவிப்பில் வெளியிட்டு இருக்கிறார். குடும்ப தலைவிக்கு மனைவியாக இருக்கும் நபருக்கே இந்த 1000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதோடு PHH-AYY, PHH, NPHH ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிதி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்து உள்ளன றும் . NPHH -S, NPHH – NS ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் 1000 ரூபாய் தொகை கொடுங்கப்பட மாட்டாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வீட்டில் அரசு ஊழியர்கள் இருந்தால் அவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படாது. வறுமை கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கு இந்த தொகை கொடுக்கப்படாது என்றும் அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version