தமிழ்நாடு
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000: நாளைய பட்ஜெட்டில் அறிவிப்பா?
திமுக தேர்தலுக்கு முன்னர் தான் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் நிலையில் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் வாக்குறுதி குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக பட்ஜெட் நாளை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பதும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது .
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்யவுள்ள இந்த பட்ஜெட்டில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1000 குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று செய்திகள் கசிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே திமுக அரசு ஏற்கனவே தான் கொடுத்த வாக்குறுதிகளான நகை கடன் தள்ளுபடி, மகளிர்களுக்கு பேருந்துகளில் இலவசம் உட்பட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் நிலையில் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்றும் வகையில் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.