தமிழ்நாடு

மாதம் ரூ.1000 எல்லோருக்கும் கிடையாது? நிதி அமைச்சர் ஷாக் அறிவிப்பு!

Published

on

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் எல்லோருக்கும் வழங்கப்படாது என பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் 1000 ரூபாய் குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

Also Read: நகைக்கடன்கள் தள்ளுபடி எப்போது? வெளியான சூப்பர் தகவல்!

திமுக தலைமையிலான அரசு பதவிக்கு வந்து 100 நாட்கள் நெருங்கியுள்ள நிலையில் ஏன் இதுவரையில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன.

Also Read: பட்ஜெட் எதிரொலி: இன்று நள்ளிரவு முதல் குறைகிறது பெட்ரோல் விலை!

அது குறித்து பட்ஜெட் தாக்கல் செய்யும் போது முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதி அமைச்சர், கொரோனா நிவாரண தொகை 4000 ரூபாய் வழங்கிய போது ஏழை மட்டுமில்லாமல் அனைவரும் பயன்பட்டார்கள், அது சரியான பயனாளிகளைச் சென்றடையவில்லை என்ற பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.

இந்நிலையில் 1000 ரூபாய் எல்லா குடும்பத் தலைவிகளுக்கும் கிடைக்காது. சரியான பயனாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதற்கான குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், குடும்பத் தலைவியாக ரேஷன் கடையிலிருந்தால் மட்டும்தான் 1000 ரூபாய் என பலரும் பெயரை மாற்றி வருகின்றனர். அது தேவையில்லை. அவர் சரியான பயனாளியாக இருந்தால் ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவியாக இல்லை என்றாலும் 1000 ரூபாய் வழங்கப்படும் என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Also Read: மகளிர் பேறுகால விடுமுறை மாதங்கள் உயர்வு: தமிழக பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

 

seithichurul

Trending

Exit mobile version