சினிமா

ஹாலிவுட்டை ஒரு கலக்கு கலக்கும் RRR; ஒட்டுமொத்தமாக 5 சர்வதேச விருதுகளை தட்டித் தூக்கியது!

Published

on

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன் மற்றும் ஸ்ரேயா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து கடந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் 1100 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியது.

ஆர்ஆர்ஆர் படத்தை வைத்துக் கொண்டு ஹாலிவுட்டில் சர்வதேச விருது விழாக்களில் போட்டியிட்டு வருகிறார் இயக்குநர் ராஜமெளலி.

#image_title

கோல்டன் குளோப் விருது விழாவில் நாட்டுக் கூத்து பாடலுக்காக சிறந்த இசை மற்றும் சிறந்த பாடல் என இரு பிரிவுகளில் இசையமைப்பாளர் கீரவாணி விருதுகளை வென்று அசத்தினார்.

ஆஸ்கர் நாமினேஷனில் பல பிரிவுகளில் போட்டியிட்ட ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடைசியாக சிறந்த பாடல் பிரிவில் நாட்டுக் கூத்து பாடல் தேர்வான நிலையில், ஒட்டுமொத்த இந்தியர்களையும் பெருமைப்படுத்தி உள்ளது.

#image_title

இந்நிலையில், இன்று நடைபெற்ற ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் விருது விழாவில் ஒட்டுமொத்தமாக 5 சர்வதேச விருதுகளை அள்ளி இந்திய ரசிகர்களை ஆச்சர்யத்தில் விளிம்புக்கே கொண்டு சென்றுள்ளது.

சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த ஆக்‌ஷன் திரைப்படம், சிறந்த பாடல், சிறந்த ஸ்டன்ட், சிறந்த ஸ்பாட்லைட் திரைப்படம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் HCA எனப்படும் ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் விருதுகளை ஆர்ஆர்ஆர் படக்குழு வென்றுள்ளது.

நடிகர் ராம் சரண் கோட் சூட் அணிந்து கொண்டு சிறந்த ஆக்‌ஷன் படத்திற்கான விருதை மேடை ஏறி வாங்கிய காட்சிகளும், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதை இயக்குநர் ராஜமெளலி வாங்கிய காட்சிகளும் ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் அடைய வைத்தன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version