சினிமா செய்திகள்

’ஆர்.ஆர்.ஆர்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு: அதற்கு பதில் ரிலீஸாகும் படம் என்ன தெரியுமா?

Published

on

இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலாக இன்னொரு பிரமாண்டமான திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் உள்பட பலர் நடித்த பிரமாண்டமான திரைப்படம் ’ஆர்.ஆர்.ஆர்’. இந்த படத்தை எஸ்எஸ் ராஜமௌலி கடந்த இரண்டு ஆண்டுகளாக இயக்கி வந்தார் என்பதும், கடந்த இரண்டு மாதங்களாக இந்த படத்தின் புரமோஷன் பணிக்காக படக்குழுவினர் கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்றார்கள் என்பதும், புரமோஷன் பணிகளுக்கு மட்டுமே ஒரு சில கோடிகளை பட தயாரிப்பாளர் ஒதுங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜனவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ரிலீஸ் ஆக திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் என ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் சற்றுமுன் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரபாஸ் நடித்த ’ராதே ஷ்யாம்’ என்ற திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version