சினிமா

அமீர்கானின் லகான் படத்திற்கு பிறகு ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்ற ஆர்ஆர்ஆர் நாட்டுக்கூத்து!

Published

on

இந்திய திரைப்படங்கள் இதுவரை ஆஸ்கர் விருதுகளை வென்றதே இல்லை. ஆஸ்கர் நாமினேஷனில் மதர் இந்தியா, சலாம் பாம்பே மற்றும் அமீர்கானின் லகான் உள்ளிட்ட திரைப்படங்கள் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆண்டு இந்தியா சார்பாக அனுப்பப்பட்ட செல்லோ ஷோ திரைப்படமும் நாமினேஷனில் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக தனியாக ஆஸ்கர் போட்டியை எதிர்கொண்ட ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டுக் கூத்து ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பிடித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

#image_title

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கீரவாணி இசையமைப்பில் உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட பல பிரிவுகளில் போட்டியிட்ட நிலையில், சிறந்த பாடல் பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்றுள்ளது.

ஆஸ்கர் 2023ல் அதிகபட்சமாக அவதார் 2, டாப்கன் மேவரிக், தி ஃபேபல்மேன்ஸ் உள்ளிட்ட படங்கள் அதிக நாமினேஷன்களை பிடித்துள்ளன. தி பேட்மேன், வக்காண்டா ஃபாரெவர் உள்ளிட்ட படங்கள் கணிசமான பிரிவுகளில் நாமினேட் செய்யப்படுள்ளன.

#image_title

இந்தியாவுக்கு சிறப்பு பரிசாக சிறந்த ஆவணப்படமாக The Elephant Whisperes எனும் இந்திய ஆவணக் குறும்படம் சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் போட்டியிட தேர்வாகி உள்ளது. மேலும், சிறந்த ஆவண திரைப்படமாக All That Breathes எனும் ஆவண திரைப்படம் பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

வரும் மார்ச் மாதம் 13ம் தேதி இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெறும். இந்த ஆண்டு எந்த வில் ஸ்மித் உள்ளே புகுந்து தொகுப்பாளரை பொழக்க போகிறாரோ தெரியவில்லை.

Trending

Exit mobile version