சினிமா செய்திகள்

என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் ரஜினி பட வசூலை எட்ட முடியாத ஆர்ஆர்ஆர்!

Published

on

எஸ்எஸ் ராஜமவுளி இயக்கத்தில் ஜூனியர் எண்டிஆர், ராம் சரன் நடிப்பில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ஆர்ஆர்ஆர் படம் சமீபத்தில் ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட்டது.

ராஜமவுளி இயக்கத்தில் கடையிடாக வெளியான பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்கள் உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்றன.

இந்நிலையில் ராஜமவுளி இயக்கத்தில் கடைசியாக வெளியான ஆர்ஆர்ஆர் படம் சமீபத்தில் ஜப்பானில் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

ஆர்ஆர்ஆர் படத்திற்கு நல்ல வரவேற்பு ஜப்பானில் கிடைத்து இருந்தாலும், 100 நாட்கள் கடந்த நிலையில் ரஜினி நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் 1995-ம் ஆண்டு இயக்கிய முத்து படத்தின் வசூலை எட்ட முடியவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

மிகவும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆன ஆர்ஆர்ஆர் படம் ஜப்பானில் இதுவரையில் 300 மில்லியன் ஜப்பான் யென் வசூல் செய்துள்ளது. முத்து திரைப்படம் 44 மில்லியன் ஜப்பான் யென் வசூல் செய்துள்ளது.

ஆர்ஆர்ஆர் படத்தை தனியார் நுழைவு மூலமாக ஆஸ்காரில் பங்கேற்பதற்கான பணியில் படக்குழுவினர்கள் இறங்கியுள்ளனர். உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஆர்ஆர்ஆர் படம் வசூல் செய்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version