சினிமா

RRR படம் ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..?

Published

on

பாகுபலி படத்தைத் தொடர்ந்து ராஜமவுளி இயக்கி வரும் படம் RRR. ராம் சரன், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன் என மூன்று ஹீரோக்கல் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணங்களால் படப்பிடிப்பு நிதானமாக நடந்தது. இப்போது ஊரடங்கு முடிந்து, படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே விரைவில் RRR படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் RRR படத்தின் ரிலீஸ் தேதி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி RRR படத்தின் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளது. படம் பொங்கல் அல்லது கோடை விடுமுறை ரிலீஸாகும். அதற்குள் உலகம் முழுவதும் திரை அரங்குகள் திறக்கப்பட்டு விடும்.

எனவே இந்த இரண்டு தேதிகளில் ஒன்றாக RRR ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாக பூமி டுடே இணையதளத்துக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

பாகுபலி படத்தைத் தொடர்ந்து ராஜமவுளி இயக்கத்தில் ரிலீஸ் ஆக உள்ள படம் என்பதால் RRR படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Trending

Exit mobile version