சினிமா செய்திகள்

ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் அஜய்தேவ்கான் மோஷன் போஸ்டர்: இணையத்தில் வைரல்!

Published

on

ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய காட்சியின் மோஷன் போஸ்டர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அட்டகாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மோஷன் போஸ்டரில் அஜய்தேவ்கனை சுற்றுவளைத்து நூற்றுக் கணக்கானோர் துப்பாக்கியை கையில் வைத்துள்ள உள்ள காட்சி இந்த மோஷன் போஸ்டரில் உள்ளது.

ஆலியா பட், ஒலிவியா மோரீஸ் ஆகிய இரண்டு நாயகிகள் நடித்துள்ள இந்த படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார். இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதையில் உருவாகும் இந்த படம் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version