சினிமா செய்திகள்

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் அனிருத் பாடிய பாடல்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published

on

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் தேஜா இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’.

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் தற்போது இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

’நட்பு’ என்று தொடங்கும் இந்த பாடலை தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் பாடி உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடலை மதன் கார்க்கி இயற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சமீபத்தில் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி அவர்கள் சமீபத்தில் அனிருத் இந்த படத்தில் பணிபுரிந்துள்ளார் என அறிவித்திருந்தார். தற்போது அவர் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் தமிழ் பதிப்பு வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான ஆலியா பட் மற்றும் அஜய் தேவ்கான் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version