கிரிக்கெட்

13 ஆண்டுகால கிரிக்கெட்டுக்கு குட்பை: ஓய்வை அறிவித்தார் ஆர்பி சிங்!

Published

on

இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்த ஆர்பி சிங் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து தனது 13 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு குட்பை தெரிவித்துள்ளார்.

35 வயதான ஆர்பி சிங் இதுவரை இந்திய அணிக்காக 14 டெஸ்ட் போட்டி, 58 ஒருநாள் போட்டி, 10 டி20 போட்டிகளில் விளையாடி 124 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் 2005-ஆம் ஆண்டு முதன் முதலாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதன் முதலாக இந்தியாவுக்காக களம் இறங்கினார். 2006-ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக தொடங்கிய ஆர்பி சிங் முதல் போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

21 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை இந்தியா ராகுல் டிராவிட் தலைமையில் வெல்ல முக்கிய பங்காற்றினார் ஆர்பி சிங். அதே போல தோனி தலைமையிலான இந்திய அணி 2007-ஆம் ஆண்டு முதல் டி20 உலகக்கோப்பைய கைப்பற்ற சிறப்பான பங்களிப்பை வழங்கினார் ஆர்பி சிங்.

இந்நிலையில் தனது ஓய்வு குறித்து டுவிட்டரில் அறிவித்துள்ள ஆர்பி சிங், 13 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்திய ஜெர்சியை முதன்முறையாக அணிந்தேன். இன்று என் கால்களுக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்துவிட்டேன். மிகுந்த வருத்தத்துடன் இதனை எழுதுகிறேன். ஓய்வை அறிவிப்பது அவ்வளவு சுலபமல்ல. ஆனாலும் இதுதான் சரியான நேரம் என மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் குரல் கேட்கிறது என கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version