உலகம்

இங்கிலாந்து இளவரசர் பிலிப் 99 வயதில் காலமானார்

Published

on

இங்கிலாந்து நாட்டின் இளவரசரான பிலிப், 99 வயதில் இயற்கை எய்தினார். இது குறித்து இங்கிலாந்து அரச குடும்பத் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘இங்கிலாந்து நாட்டு இளவரசி, தனது கணவரும் இளவரசருமான பிலிப் இறந்துவிட்டச் செய்தியை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறார்.

விண்ட்சர் கோட்டையில் இன்று காலை இளவரசர் பிலிப் மிகுந்த அமைதியாக இயற்கை எய்தினார்.

மேலும் இது குறித்தான தகவல்கள் விரைவில் விளக்கமாக அறிவிக்கப்படும்.

உலகம் முழுவதும் இளவரசர் பிலிப்பின் மரணத்துக்காக வருந்தும் மக்களுடன் இங்கிலாந்து அரச குடும்பமும் இணைந்து கொள்கிறது’ என்று அரச குடும்பம் சார்பில் வெளியிடப்பட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version