ஆட்டோமொபைல்

Royal Enfield பிரியர்கள் அதிர்ச்சி.. ஒரே ஆண்டில் இரண்டு முறை விலை உயர்வு!

Published

on

Royal Enfield நிறுவனம் ஒரே ஆண்டில் இரண்டு முறை தங்களது வாகனங்களின் விலையை உயர்த்தி இருப்பது, Royal Enfield பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Royal Enfield புல்லட் 350 வாகனத்தின் விலை அதன் மாறுதல்களைப் பொருத்து 1 ஆயிரம் ரூபாய் முதல் 13 ஆயிரம் ரூபாய் வரையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Royal Enfield கிளாசிக் 350 வாகனம் 10 ஆயிரம் ரூபாய் வரையில் விலை உயர்ந்துள்ளது. Royal Enfield மெட்டியோர் 350 வாகனம் 6 ஆயிரம் ரூபாய் வரையில் விலை உயர்ந்துள்ளது.

இரும்பு மற்றும் பிற உதிரிப்பாகங்களில் தயாரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதால், வாகனங்களில் விலையை உயர்த்தியுள்ளதாக Royal Enfield நிறுவனம் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version