வைரல் செய்திகள்

4 கிலோ அசைவ மீல்ஸ் ப்ளேட்… காலி செய்தால் ஒரு ராயல் என்ஃபீல்டு பைக்!- சவால் விடுக்கும் உணவகம்

Published

on

4 கிலோ அசைவ உணவுகள் நிறைந்த மீல்ஸ் தட்டை காலி செய்பவருக்கு ஒரு ராயல் என்ஃபீல்டு பைக் இலவசம் என உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.

பூனேவில் உள்ள அதுல் வாய்க்கர் என்பவர் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது ஹோட்டலில் புல்லட் மீல்ஸ், ராவணன் மீல்ஸ், மால்வானி மீன் சாப்பாடு ஆகிய உணவுகள் வெகு பிரபலம். இவையெல்லாம் ஒரு தட்டு 2,500 ரூபாய்க்கு என அளித்து வந்துள்ளார் அதுல். ஆனால், கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஹோட்டல் திறக்கப்பட்ட பின்னர் அதுலின் உணவகத்துக்கு மக்கள் கூட்டம் பெரிதாக ஆர்வம் காட்டவில்லையாம்.

அதனால், தனது உணவகத்துக்கு வர மக்களைக் கவரும் வகையில் ஒரு புதிய அதிரடி திட்டம் ஒன்றை அறிவித்தார். அதன் அடிப்படையில் 4 கிலோ நிறைந்த அசைவ உணவுகள் கொண்ட மீல்ஸ் தட்டை காலி செய்பவருக்கு ஒரு ராயல் என்ஃபீல்டு பைக் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து விட்டார். அறிவிப்புடன் கடை முன்னர் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை இறக்கி ஒரு அணிவகுப்புக் கண்காட்சியே வைத்து உள்ளார்.

4 கிலோ அசைவ உணவுகள் நிறைந்த இந்தத் தட்டில் மீன் உணவுகளில் ஒரு 3 ரகம், மட்டனில் ஒரு 3 ரகம், இறாலில் ஒரு 2 ரகம், கோழியில் ஒரு 3 ரகம் என அத்தனையும் இருக்குமாம். இதை ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டு முடித்தால் 1.65 லட்சம் மதிப்புள்ள ராயல்ல் என்ஃபீல்டு பைக் சாப்பிட்டு முடித்த உடனேயே பரிசாக வழங்கப்படும். இதுவரையில் ஒரே ஒருவர் மட்டும் தான் 4 கிலோ உணவை சாப்பிட்டு போட்டியில் வென்று பைக்கை பெற்றுள்ளார்.

ஆனால், தினமும் தற்போது இந்த ராட்சத மீல்ஸ் ப்ளேட்டை சாப்பிட 65 பேராவது வந்து விடுகிறார்களாம். சாப்பிட முடியாதவர்கள் 2,500 ரூபாய் பில் கட்ட வேண்டும்.

Trending

Exit mobile version