செய்திகள்

கூலித்தொழிலாளிகளுக்கு அரிவாள் வெட்டு… ரவுடிக்கு சரமாரி அடி உதை…

Published

on

எப்போதும் பரபரப்பாக இயங்கும் சென்னை  கோயம்பேடு காய்கறி சந்தையில்  மூட்டை தூக்கும் கூலி தொளிலாளிகள் 2 பேருக்கு ஓட ஓட சரமாரி அரிவாள் வெட்டு. கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளில் ஒருவரை சக தொழிலாளிகள் தருமடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முருகேசன்(47) , மற்றும் முருகன்(26) இருவரும் தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் கூலிதொழிலாளியாக வேலை செய்து வருகிறனர்.

 

இந்நிலையில் நேற்று இரவு 9:30 மணி அளவில் முருகேசன் வேலை செய்து கொண்டிருக்கும்போது  அங்கு வந்த 2 வாலிபர்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் முருகேசன் என்பவரை சரமாரியாக தலை மற்றும் கை, கால் பகுதியில் வெட்டினர். அப்போது முருகேசனின் அலற சத்தம் கேட்ட பக்கத்து கடையில் வேலை செய்யும் கூலி தொழிலாளி முருகன் ஓடி வந்து மடக்கிய முருகன் என்பரையும்  சரமாரியாக வெட்டியது அந்த கும்பல்.

 

இருவரையும் வெட்டிவிட்டு தப்ப முயன்ற போது ஒருவரை மட்டும் வியாபாரிகள் மடக்கி பிடித்து சரமாரியாக தர்ம அடி கொடுத்தனர். மற்றோருவர் தப்பித்து ஒடினர்.

 

வெட்டு காயம்பட்ட இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இது தொடர்பாக கோயம்பேடு காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ஒருவரை கைது செய்து கோயம்பேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போது வியாசார்பாடி சேர்ந்தவர் ரவுடி ராஜேஷ் (37) என்றும் இவர் மீது ஏற்கெனவே அடிதடி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

 

கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து ராஜேஷ் என்பவருடன் வந்த மற்றொரு மர்ம நபரை வலை வீசி தேடிவருகின்றனர் போலீசார்.

 

மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி தொழிலாளியை சரமாரியாக வெட்டிய சம்பவம் மற்ற கூலி தொழிலாளி மற்றும் வியாபாரிகள் அலறி அடித்து ஓடிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திள்ளது.

Trending

Exit mobile version