தமிழ்நாடு

பதவியேற்பு விழாவின்போது கைது செய்யப்பட்ட ஊராட்சி பெண் உறுப்பினர்: கஞ்சா கடத்தினாரா?

Published

on

பிரபல ரவுடி ஒருவரின் மனைவி ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருந்த நிலையில் அவர் பதவி ஏற்கும் போதே அவரை கஞ்சா கடத்திய வழக்கில் போலீசார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும் வெற்றியை பெற்று இருந்தது என்பதும் இன்னொரு பக்கம் விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் நல்ல வெற்றியை பெற்று இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் தற்போது பதவி ஏற்று வரும் நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் ஊராட்சியின் ஒன்பதாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபல ரவுடியின் மனைவியை பதவி ஏற்பு விழாவில் வைத்தே கஞ்சா கடத்தி விற்பனை செய்த வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

பிரபல ரவுடியான நெடுங்குன்றம் சூரியா மீது கொலை கொலை முயற்சி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதூ. இந்த நிலையில் தனது மனைவி விஜயலட்சுமியை எதிர்த்து யாரும் போட்டியிட கூடாது எனவும் விஜயலட்சுமிக்கும் ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவி கேட்டும் சிறையில் இருந்து கொண்டே சூர்யா மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெற்றி பெற்ற ரவுடி மனைவி விஜயலட்சுமி இன்று பதவியேற்க இருந்த நிலையில் அவர் கஞ்சா கடத்தி விற்பனை செய்வது தெரிய வந்ததால் கைது செய்ததாக காவல்துறையினர் விளக்கமளித்துள்ளது. இதனால் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version