சினிமா செய்திகள்

’ராக்கி’ திரைப்பட உரிமையைக் கைப்பற்றிய நயன்தாரா- விக்னேஷ் சிவன்..!

Published

on

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாராவின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ நிறுவனம் ’ராக்கி’ திரைப்படத்தின் உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

ராக்கி திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டிங் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தில் தரமணி புகழ் வசந்த் ரவி, இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இதற்கு முன்னர் ஆரண்ய காண்டம் திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் வசன எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது இயக்குநர் செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘சாணிக் காயிதம்’ திரைப்படத்தையும் அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். விரைவில் வெளியாக உள்ள ராக்கி திரைப்படத்தின் உரிமையை தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கெனவே நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது.

Trending

Exit mobile version