ஆரோக்கியம்

உதடு சிவப்பாக எளிய டிப்ஸ்!

Published

on

உதடு சிவப்பாக மாற்ற, இரவு தூங்கும் முன் வெண்ணெய்யை உதட்டில் தடவவும்.

வெள்ளரிக்காய் துண்டுகளாக வெட்டி உதட்டில் தேய்க்கவும்.

ஈரப்பதத்தைத் தொடர்ந்து தக்கவைக்கத் தேன் தடவிக் கொள்ளவும்.

உதட்டுச் சாயம்

மருதாணி இலை 10, குங்குமப்பூ கால் டீஸ்பூன் இரண்டையும் மைய அரைத்துக் கொள்ளவும். பின்பு அதிகம் நீர்விடாமல் தேவைக்கேற்ப கற்றாழை சாறு எடுத்துச் சேர்த்துக்கொள்ளவும்.

உதட்டை சுத்தமாகக் கழுவி, பின் இந்த கலவையை உதட்டின்மீது போடுங்கள். 15நிமிடம் கழித்துக் கழுவவும். பின்பு ஆலிவ்/ தேங்காய் எண்ணெய் போட்டு மசாஜ் செய்யவும். இது சருமத்தில் படாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.

இவ்வாறு தொடர்ந்து செய்வதினால், பிறர் பார்த்து வியக்கும் வண்ணம் உதடு சிவப்பாக மாறும்.

seithichurul

Trending

Exit mobile version