கிரிக்கெட்

ரோஹித் ஷர்மா அசத்தல்: ஹிட் மேனின் சாதனை சதம்!

Published

on

நேற்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதின் மூலம் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து இந்தியாவும் அரையிறுதிக்குள் நுழைந்தது. இதில் இந்தியாவின் வெற்றிக்கு ரோஹித் ஷர்மாவின் சாதனை சதம் பெரும் உதவியாக இருந்தது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் போட்டி வங்கதேசம், இந்தியா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா ஜோடி சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்தது.

இதில் ரோஹித் ஷர்மா சதம் அடித்த கையோடு 104 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த உலகக் கோப்பை தொடரில் மட்டும் ரோஹித் ஷர்மா அடித்த நான்காவது சதம் இதுவாகும். இந்த அசத்தல் சதத்தின் மூலம் ரோஹித் ஷர்மா உலகக் கோப்பை போட்டிகளில் சாதனை ஒன்றை படைத்துள்ளார். உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ரோஹித் ஷர்மா. முதல் இடத்தில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கள் 6 சதங்களுடன் முன்னிலையில் உள்ளார்.

ரிக்கி பாண்டிங், சவுரவ் கங்குலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் 5 சதங்களுடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். இந்த தொடரிலேயே ரோஹித் ஷர்மா சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து முதலிடத்துக்கு வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

seithichurul

Trending

Exit mobile version