கிரிக்கெட்

இந்திய அணியுடன் இணைந்த ரோகித்; உற்சாக வரவேற்பளித்த வீரர்கள்- வைரல் வீடியோ!

Published

on

ஆஸ்திரேலியா பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை முடித்துக் கொண்டுள்ள நிலையில், தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இழந்த இந்தியா, டி20 தொடரைக் கைப்பற்றியது. தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா, குவாரன்டீன் காலத்தை முடித்துக் கொண்டு அணியினருடன் இணைந்துள்ளார்.

காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இதுவரை பங்கேற்காமல் இருந்த ரோகித், தற்போது உடற்தகுதி பெற்று அணிக்குத் திரும்பியுள்ளார். விராட் கோலி இல்லாத இரண்டு ஆட்டங்களில் ரோகித்தின் வருகை அணிக்குப் பெரும் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடான விகாரிக்கு பதிலாக ரோகித், அணியில் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. மேலும் இந்த முறை ரோகித், தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பிருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.

ரோகித், இந்திய அணியினருடன் சேர்ந்துள்ள வீடியோவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இதோ:

seithichurul

Trending

Exit mobile version