கிரிக்கெட்

நியூசிலாந்து தொடரில் இருந்து விராத் கோஹ்லி நீக்கம்: புதிய கேப்டன் அறிவிப்பு!

Published

on

இந்தியா- நியூசிலாந்து நாடுகளில் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அணியில் விராத் கோஹ்லி நீக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு வருகை தந்து மூன்று டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் போட்டிக்கு இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேஎல் ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் விராட் கோஹ்லிக்கு ஓய்வு தரப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி விவரங்கள் பின்வருமாறு: ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ருத்ராஜ், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷான், வெங்கடேஷ ஐயர், சாஹல், அஸ்வின், அக்சர் பட்டேல், அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், ஹர்ஷா பட்டேல், முகமது சிராஜ்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜெய்ப்பூரில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஞ்சியில் இரண்டாவது டி20 போட்டி நவம்பர் 19ஆம் தேதியும், 3வது டி20 போட்டி நவம்பர் 21ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version