கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா!

Published

on

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ரோகித் ஷர்மா செய்துள்ளார்.

வங்க தேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்வில் விளையாடி வருகிறது.

இதுவரையில் நடைபெற்றுள்ள இரண்டு கிரிக்கெட் போட்டிகளில் வங்க தேசம் வெற்றிபெற்ற தொடரை கைப்பற்றியுள்ளது.

இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிகெட் போட்டியில் கடைசி நேரத்தில் வந்து விளையாடிய ரோகித் ஷார்மா 28 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 51 ரன்களை விளாசினார்.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ரோகித் ஷர்மா செய்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 256 சிக்சர்களும், டி20 தொடரில் 182 சிக்சர்களும், டெஸ்ட் தொடரில் 64 சிக்சர்களும் ரோகித் ஷர்மா விளாசியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெயில் செய்துள்ளார். இரண்டாம் இடத்தில் ரோகித் ஷர்மா உள்ளார். ஷாகின் அஃப்ரீடி 476 சிக்சர்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.

தல தோனி 359 சிக்சர்களுடன் இந்த பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version