சினிமா

ரோகிணி தியேட்டர் விவகாரம்: காட்டமாகக் கருத்து தெரிவித்த பிரியா பவானி சங்கர்!

Published

on

சிலம்பரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ’பத்து தல’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தினை ரோகிணி திரையரங்கில் பார்க்க வந்த நரிக்குறவர் இன மக்களை உள்ளே விடாத விவகாரம் தீண்டாமையாகப் பொதுமக்கள் மத்தியிலும் திரைத்துறையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில், இந்தப் படத்தின் கதாநாயகி பிரியா பவானி சங்கரும் இதுகுறித்து ட்வீட் செய்திருக்கிறார்.

‘எல்லாரும் அவங்க வேலையைப் பார்த்துட்டுப் போறப்போ, டிக்கெட் இருக்குல்ல, ஏன் உள்ளே விட மாட்டேங்கறீங்கன்னு கேட்ட அந்தக் குரல்தான் இது போன்ற செயலுக்கு எதிரான முதல் குரல். அவங்க உடைதான் திரையரங்க நிர்வாகிகளுக்குப் பிரச்சனைன்னா அவர்கள் அறிய அடைய வேண்டிய நாகரிகம் ரொம்ப தூரத்தில் இருக்கிறது’ எனக் கூறி இருக்கிறார்.

தியேட்டர் ரோகிணி தரப்பு இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் போதும், ரோகிணி தியேட்டரைப் புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஷ்டேக் சமூகவலைதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version