சினிமா

என்ன கன்றாவிடா இது! மகளுடன் ரோமியோ ஆட்டம் போட்ட ரோபோ சங்கர்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

Published

on

ரோபோ சங்கர் திடீரென தனது உடல் எடையை கணிசமாக குறைத்து நடனமாடியுள்ள வீடியோ டிரெண்டாகி வருகிறது. அந்த லேட்டஸ்ட் ரீலில் அவர் தனது மகள் இந்திரஜா சங்கர் உடன் நடனமாடியிருப்பதை பார்த்த நெட்டிசன்கள் பயங்கரமாக கிண்டல் செய்து ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி திரையுலகுக்கு வந்தவர் ரோபோ சங்கர்.

சமீபத்தில், தனது திருமண நாளை கொண்டாடிய ரோபோ சங்கர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை ஜெயிலர் பட செட்டிலேயே சந்தித்து அவருடன் போட்டோக்கள் எடுத்துக் கொண்டார்.

ரோபோ சங்கருக்கு உலக நாயகனும் தனது பங்கிற்கு போன் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இப்படி முன்னணி நடிகர்களுடன் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கும் ரோபோ சங்கர் சினிமாவில் காமெடியனாக கலக்கி வருகிறார்.

இந்த ஆண்டு வெளியான பார்த்திபனின் சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவின் நிழல் படத்தில் சாமியாராக நடித்திருந்தார் ரோபோ சங்கர். இந்நிலையில், தனது மகள் இந்திரஜா சங்கருடன் அவர் போட்டுள்ள குத்தாட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

அதுவும் பிரபுதேவாவின் “ரோமியோ ஆட்டம் போட்டா சுற்றும் பூமி சுற்றாது” என்கிற பாடலுக்கு ரோபோ சங்கர் நடனமாடியுள்ள நிலையில், அதை பார்த்த நெட்டிசன்கள் மகளுடன் ஆட வேண்டிய பாடலா இது என கலாய்த்து வருகின்றனர்.

ரோபோ சங்கரின் மகள் பரதநாட்டிய டான்ஸர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்து அசத்திய இந்திரஜா சங்கர், இந்த ஆண்டு கார்த்தியின் விருமன் படத்தில் அதிதி ஷங்கரின் தோழியாக நடித்து அசத்தி இருந்தார். அப்பா மற்றும் மகள் இருவரும் செம க்யூட்டாக ஆடியிருக்கும் நடன வீடியோவிற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version