சினிமா செய்திகள்

தமிழ்நாடு இயக்குனர் சங்க தேர்தல்: கே. பாக்யராஜ் அணி தோல்வி!

Published

on

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கே பாக்யராஜ் அணி தோல்வியடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு இயக்குனர் சங்க தேர்தலின் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை நடை பெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி உடனே தொடங்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் புது வசந்தம் அணியின் தலைவரான ஆர்கே செல்வமணி மீண்டும் தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டது. அவரது அணியினரும் மற்ற பதவிகளுக்கு வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்கே செல்மணிக்கு 955 வாக்குகளும் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மற்றொரு வேட்பாளரான கே பாக்யராஜ்க்கு 566 வாக்குகளும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மீண்டும் ஆர்கே செல்வமணி இயக்குனர் சங்க தலைவராக தேர்வு பெற்றதால் அவருக்கு திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version