சினிமா செய்திகள்

ரெளடி, கொலைகாரன், திருடன்: அஜித்தை தாக்கினாரா ஆர்ஜே பாலாஜி?

Published

on

ரவுடி, கொலைகாரன், திருடன், கொலைகாரன் ஆகிய கேரக்டர்களில் அஜித் நடிப்பதாக மறைமுகமாக அவரை ஆர்ஜே பாலாஜி தாக்கி இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

ஆர்ஜே பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ என்ற படத்தின் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி இன்று வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் கதைப்படி ஹீரோவின் அம்மா திடீரென கர்ப்பம் ஆகி விடுவார் என்பதும் அதனால் ஹீரோவுக்கு ஏற்படும் தர்மசங்கடங்கள் நகைச்சுவையாக கூறப்பட்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இந்த கதை தமிழகத்தில் எடுபடுமா என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி நிலையில் ஆர்ஜே பாலாஜி தனது டுவிட்டரில், ‘ஆமா !!! Familyல ஒருத்தங்க preganant ஆனா மாறி படம் எடுத்தா controversial story, But hero rowdy, don, கொலைகாரன், திருடன், smugglerஆ நடிச்சா family subject படம்’ என்று பதிவு செய்துள்ளார்.

இந்த டுவிட் அஜித்தை குறிவைத்து தாக்கி இருப்பதாக பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,. ரவுடி, கொலைகாரன் திருடன் கொலைகாரன் ஆகிய கேரக்டரில் அஜித் தான் அதிகம் நடித்திருப்பதாகவும், மேலும் அவருடைய படத்தை தான் ஃபேமிலி சப்ஜெக்ட் படம் என்று ரசிகர்கள் கூறுவார்கள் என்றும் ஆர் ஜே பாலாஜி அதனையே மறைமுகமாக குறிப்பிட்டார் என்று கூறி வருகின்றனர்.

இதனால் ஆர் ஜே பாலாஜி இந்த டுவிட்டுக்கு அஜித் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

Trending

Exit mobile version