சினிமா செய்திகள்

ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படம்: கே.பாக்யராஜிடம் ஆலோசனை!

Published

on

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தை சமீபத்தில் நடித்து இயக்கிய ஆர்ஜே பாலாஜி தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாகவும் இது குறித்து பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் இடம் ஆலோசனை பெற்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ஆர்ஜே பாலாஜி பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ’பாதாய் ஹோ என்ற காமெடி திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார்

இந்த படத்திற்கு ’வீட்ல விசேஷங்க’ என்ற டைட்டில் வைக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் இந்த டைட்டில் அனுமதி பெறுவதற்காக அவர் கே பாக்யராஜ் அவர்களை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது

இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் அவரே நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தில் உள்ள கர்ப்பிணி கேரக்டரில் நடிக்க பிரபல நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது 2018ம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம் ’பாதாய் ஹோ, ரூபாய் 250 கோடி வசூல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version