தமிழ்நாடு

பிளஸ் 2 ரிசல்ட் வந்த நேரத்தில் ஆர்ஜே பாலாஜி கூறிய சரியான அறிவுரை

Published

on

இன்று பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு முடிவுகளை பார்த்து வருகிறார்கள் என்பதும், மதிப்பெண் பட்டியலையும் டவுன்லோட் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேர்வு முடிவுகளில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவிகள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத மாணவ மாணவிகள் தவறான முடிவு எடுக்கும் வழக்கம் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று சரியான நேரத்தில் ஆர் ஜே பாலாஜி மாணவ மாணவிகளுக்கு அறிவுரை கூறிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

12ஆம் வகுப்பு மதிப்பெண் தான் வாழ்க்கையை மாற்றப் போகிறது என்று யாராவது சொன்னால் அதை சத்தியமாக நம்பாதீர்கள். அப்படி கூறுபவர்களின் முகத்தில் குத்துங்கள்.

நான் 12ஆம் வகுப்பு கணக்கு பாடத்தில் தோல்வி அடைந்தேன்ப். ஆனால் இன்று நான் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளேன். எனவே 12ஆம் வகுப்பு மதிப்பெண்ணுடன் வாழ்க்கை முடிவதில்லை. அதன்பின் ஏராளமான வாழ்க்கை இருக்கிறது.

தயவுசெய்து மாணவர்கள் மதிப்பெண் குறைவாக எடுத்தால் திட்ட வேண்டாம் அவர்களுக்கு ஊக்கம் அளியுங்கள் என பெற்றோர்களுக்கும் ஆர்ஜே பாலாஜி தனது அறிவுரையை கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version