சினிமா செய்திகள்

பாடலாசிரியராக மாறிய ஆர்.ஜே. விக்னேஷ்!

Published

on

பிளாக்‌ஷிப் டீமின் முக்கிய நபரான ஆர்.ஜே. விக்னேஷ் பிளாக்‌ஷிப் டீம் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தில் இடம்பெற்றுள்ள இண்டர்நெட் பசங்க பாடலை எழுதியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகியுள்ள படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா. இந்த படத்தில் விஜய் டிவி புகழ் ரியோ ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருடைய நண்பராக ஆர்.ஜே. விக்னேஷ்காந்தும் படத்தில் நடித்துள்ளார்.

பிளாக்‌ஷிப் டீமை சேர்ந்த கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இண்டர்நெட் பசங்க என்ற பாடலை ஆர்.ஜே விக்னேஷ்காந்த் எழுதியுள்ளார். அந்த பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது.

Trending

Exit mobile version