உலகம்

இலங்கை குண்டுவெடிப்பில் அமைச்சரின் தம்பிக்கு தொடர்பு: ராணுவம் விளக்கம்!

Published

on

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் சகோதரரை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று இரண்டு தேவாலயங்கள், ஹோட்டல்கள் என அடுத்தடுத்து 9 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறி உலகம் முழுவதையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. இந்த குண்டுவெடிப்பில் 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை தொடங்கியது. இதில் பலர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். வீடியோ ஆதாரங்கள் மூலம் சில அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இலங்கை வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீனின் சகோதரருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதனையடுத்து அமைச்சர் ரிஷாத் பத்யுதீனின் சகோதரருக்கு தொடர் குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாக கூறி இலங்கை ராணுவம் அவரை கைது செய்துள்ளது. இது தொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளது ராணுவம். இந்நிலையில் இலங்கையில் தமிழர்களை குறிவைத்து குண்டு வெடிப்பு தாக்குதல் நடைபெற்றுள்ளது என நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version