கிரிக்கெட்

ஜாக் கிராலியை ஸ்லெட்ஜ் செய்து ஒரே பந்தில் வீட்டுக்கு அனுப்பிய ரிஷப் பன்ட்; ‘ககபோ மொமென்ட்’

Published

on

இந்தியா – இங்கிலாந்துக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பித்தது. போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆட்டத்தின் முதல் நாளான இன்று தற்போது வரை இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்து திணறி வருகிறது. இன்றைய போட்டி முழுவதும் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை தொடர்ந்து ஸ்லெட்ஜ் செய்து கடுப்பேற்றி வருகிறார். பன்டின் தொந்தரவால் கொதிப்படையும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பலர் தங்களது விக்கெட்டுகளை பரிதாபமாக இழந்து வெளியேறும் சம்பவங்களும் நடந்துள்ளன.

அந்த வகையில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஜாக் கிராலி, இன்று களமிறங்கியது முதலே நிதானமான ஆட்டத்தைக் கடைபிடித்து வந்தார். அவர் 29 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே அடித்து விளையாடி வந்தார். அப்போது சுழற் பந்து வீச்சாளர் அக்சர் படேல், கிராலிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்துகளை வீசினார்.

கிராலி, படேலின் பந்தை எப்படியாவது பவுண்டரிக்கு அனுப்பிவிட வேண்டும் என்னும் நோக்கில் ஓவர் தொடங்கியது முதல் செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஓவரின் நான்காவது பந்தில் பன்ட், ‘யாருக்கோ இன்று மிகவும் கோபம் அதிகரிக்கிறது’ என்று மீண்டும் சூசகமாக சொல்லி வந்தார். அவர் கிராலியைத் தான் கிண்டல் செய்கிறார் என்பது வெளிப்படையாக தெரிந்தது.

இதையடுத்து ஓவரின் 5 வது பந்தை சிக்ஸர் அடிக்கும் நோக்கில் ஏறி வந்து விளையாடினான் கிராலி. ஆனால் அந்து பேட்டின் விளிம்பில் பட்டு லாங் ஆஃப் பகுதியில் இருப்பவரிடம் கேட்ச்சாக சென்றது.

இந்த விக்கெட்டுக்கு முழுக் காரணமாக அமைந்தது ஸ்டம்புக்குப் பின்னால் இருந்து கத்திக் கொண்டே இருந்த பன்ட் செயல் தான் என்று இது குறித்தான காணொலியைப் பகிர்ந்து வரும் ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர்.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி, 2 – 1 என்ற நிலையில் முன்னிலைப் பெற்றுள்ளது. கடைசி போட்டியிலும் வெற்றி பெற்றால் இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இங்கிலாந்து அணி, மூன்றாவது போட்டியைப் போல முழுவதும் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் விளையாட வேண்டும் என்கிற முனைப்போடு களமிறங்கியுள்ளது.

 

Trending

Exit mobile version