இந்தியா

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!

Published

on

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்து உள்ள நிலையில் சமையல் சிலிண்டர் விலையும் அவ்வப்போது உயர்ந்து வருவது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்துள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமையல் சிலிண்டரின் விலை கடந்த ஜூலை 1ஆம் தேதி ரூபாய் 25 உயர்த்தப்பட்டது என்பதும் அதனை அடுத்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 850.50 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று திடீரென மீண்டும் ரூபாய் 25 சமையல் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இதனை அடுத்து தற்போது சிலிண்டர் விலை ரூபாய் 875.50 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் வணிகர் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூபாய் 5 குறைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து வணிகர் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூபாய் 1756 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய விலை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது ஏழை எளிய மக்கள் நடுத்தர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக சமையல் எண்ணெய் உள்பட அத்தியாவசியப் பொருட்கள் விலை அனைத்தும் உயர்ந்துள்ள நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் ரூபாய் 25 உயர்ந்துள்ளது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version