வணிகம்

மொபைல் நெட்வொர்க் சேவை போன்று பிராட்பேண்டிலும் புதிய திட்டத்துடன் களம் இறங்கும் ஜியோ!

Published

on

மும்பை: இரண்டு வருடங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் மொபைல் நெட்வொர்க் சேவையில் இலவசம், குறைந்த விலையில் இணையதளத் தரவு மற்றும் இலவச அழைப்புகள் எனப் புதிய புரட்சியைச் செய்த நிலையில் அதே போன்று ஒரு திட்டத்துடன் பிராட்பேண்ட் சேவையினையும் அளிக்க இருக்கிறது என்று செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

அதன் ஒரு திட்டமாக ஹாத்வே கேபிள், டேட்டா காம் லிமிட்டட் மற்றும் டென் நெட்வொர்க்ஸ் ஆகிய பிராட்பேண்ட் நிறுவனங்களை வாங்கிச் சேவை வசதிகளை மெருகேற்ற ஜியோ திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் 1,100 நகரங்களில் 50 மில்லியன் வீடுகளை ரிலையன்ஸ் ஜியோ ஜிகோஃபைபர் சென்று சேருவதை இலக்காக ரிலையன்ஸ் வைத்துள்ளது. மேலும் 27,000 உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்களையும் தங்களது பிராட்பேண்ட் சேவையில் இணைக்கும் பணிகளிலும் ஜியோ இறங்கியுள்ளது.

ஜியோ ஜிகா ஃபைபர் சேவைக்கான புக்கிங் ஆகஸ்ட் மாதமே துவங்கப்பட்ட நிலையில் தீபாவளி முதல் வணிக ரீதியான சேவை தொடங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version