தமிழ்நாடு

கோவைக்கு யோகி ஆதித்யநாத் வருகை… ரகளையில் ஈடுபட்ட பாஜக ஆதரவாளர்கள்; அதிர்ச்சி வீடியோ!

Published

on

உத்தரப் பிரதேச மாநில முதல்வரும் பாஜகவின் தேசிய நிர்வாகிகளில் ஒருவருமான யோகி ஆதித்யநாத், இன்று தமிழகத்துக்கு வருகை தந்து பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். முதலில் விருதுநகரில் பிரச்சாரம் செய்த அவர் பின்னர் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசனை ஆதரித்துப் பரப்புரை செய்தார்.

தமிழகத்தைவிட வளர்ச்சியிலும் கல்வியிலும் பன்மடங்கு பின்தங்கியிருக்கும் உத்தரப் பிரதேசத்தின் முதல்வரை தமிழகத்தின் தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைத்தது சமூக வலைதளங்களில் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்நிலையில் இன்று கோவைக்கு யோகி ஆதித்யநாத் வருவதற்கு முன்னர் நகரத்தின் டவுன் ஹால் சாலையில் இரு சக்கர வாகனங்களில் வந்த பாஜக ஆதரவாளர்கள் பலர், கடைகளை மூட சொல்லி பிரச்சனை செய்தனர்.

பாஜக சார்பில் பெரும் பிரச்சாரம் நடைபெற உள்ளதால் கடைகளை மூட வேண்டும் என்று அவர்கள் சொன்னதாக தெரிகிறது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இது குறித்தான வீடியோவும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version