கிரிக்கெட்

உலகக்கோப்பையில் இந்திய அணி சவாலாக இருக்கும்: ரிக்கி பாண்டிங் கணிப்பு!

Published

on

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நிறைவடைந்ததையடுத்து கிக்கெட் ரசிகர்கள் அடுத்து ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர். வரும் 30-ஆம் தேதி இங்கிலாந்து நாட்டில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி ரிக்கி பாண்டிங் தலைமையில் பல சாதனைகளை படைத்துள்ளது. உலகக்கோப்பை போட்டிகளிலும் இவரது தலைமையில் வெற்றிவாகை சூடிய ஆஸ்திரேலிய அணி பல சாதனைகளை புரிந்துள்ளது. இந்நிலையில் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடர் குறித்து பேசிய அவர், வார்னர் மற்றும் ஸ்மித் வருகையால் ஆஸ்திரேலியா அணி புதிய பலம் பெற்றுள்ளது. இருவரும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினர். இது உலகக்கோப்பையில் தொடர்ந்தால், ஆஸ்திரேலிய அணி மீண்டும் உலகக்கோப்பையை தக்கவைத்துக்கொள்ளும்.

ஆனால் இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் இந்த உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவதால் இங்கிலாந்து அணிக்கும் கோப்பையை வெல்ல வாய்ப்பிருக்கிறது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணிக்கு உள்ளூர் மைதானம், சூழல் என அனைத்தும் சாதகமாக உள்ளது. ஆனால் எப்படி இருந்தாலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கும் கடும் போட்டி தர கூடியது இந்திய அணிதான். இந்திய அணி பெரும் சவாலாக உள்ளது. உலகக்கோப்பைக்கான போட்டி இந்த மூன்று அணிகளுக்கு இடையே தான் இருக்கும் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version