இந்தியா

ரேசன் கடையில் இலவச அரிசி-கோதுமை திடீர் நிறுத்தம்: பொதுமக்கள் அதிர்ச்சி!

Published

on

ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் இலவச அரிசி மற்றும் கோதுமை வரும் 30ஆம் தேதியுடன் நிறுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் வேலையின்றி வருமானம் இன்றி இருந்த காரணத்தினால், இந்தியாவில் உள்ள 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

அதற்காக பிரதமரின் க்ரீம் கல்யாண் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி மதிப்புள்ள அரிசி மற்றும் கோதுமைக்கு வழங்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து மீண்டும் இயல்பு நிலை திரும்பி உள்ளதை அடுத்து பொதுமக்கள் வேலைக்கு சென்று வருமானம் பெறுகின்றனர்.

இதன் காரணமாக நவம்பர் 30ஆம் தேதியுடன் இந்த திட்டம் இலவச அரிசி கோதுமை வழங்கும் திட்டம் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் இந்த திட்டத்தை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டது என்பதும் ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கொண்டே இருந்ததால் நீடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வரும் நவம்பர் 30 ஆம் தேதிக்கு பின்னர் பிரதமரின் க்ரீம் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி மற்றும் கோதுமை நீடிக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஏழை எளிய மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒன்றரை வருடமாக இலவச அரிசி மற்றும் கோதுமை பெற்றுவந்த ஏழை எளிய மக்கள் இனி பணம் கொடுத்து பெற வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version