தமிழ்நாடு

வினாத்தாள் கசிந்ததால் பரபரப்பு: திட்டமிட்டபடி இன்று திருப்புதல் தேர்வு நடைபெறுமா?

Published

on

10ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு இன்று முதல் நடைபெற உள்ள நிலையில் நேற்று இரவு இந்த தேர்வுகளின் கேள்வி தாள்கள் கசிந்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று நடைபெறும் தேர்வுக்கான கேள்வித்தாள் அச்சடிக்கப்பட்டு முன்பு முன்கூட்டியே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் இந்த வினாத்தாள்கள் வாட்ஸ்அப் டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் கசிந்து விட்டதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடப்பட்டது.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் வினாத்தாள்கள் கசிந்தது குறித்து விசாரணை செய்ய தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு மற்றும் 12ஆம் வகுப்பு கணிதத் திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்து உள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது இந்த காலத்தில் வினாத்தாள்கள் கசிந்து வருவதை தவிர்ப்பது கடினம் என்றும் அதிகாரிகள் மனசாட்சிப்படி வேலை பார்க்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version