கிரிக்கெட்

மும்பை அணிக்கு விட்டு கொடுத்ததா பஞ்சாப்? மேட்ச் பார்ப்பவர்கள் முட்டாள்களா?

Published

on

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பஞ்சாப் அணி வேண்டுமென்றே விட்டுக் கொடுப்பது போல் இருந்ததாக விமர்சகர்கள் சிலர் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் அடித்து ஆட வேண்டும் என்பதை மறந்து மிகவும் சுமாராகவே விளையாடியது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து வெறும் 136 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பஞ்சாப் அணியின் முக்கிய பேட்ஸ்மேனான கெயில் நேற்று ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கப்படாதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய போட்டியில் பஞ்சாபின் மயங்க் அகர்வால் காயம் அடைந்ததால் விளையாடவில்லை என்பதால் அவருக்கு பதில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக கிறிஸ் கெயில் களமிறக்கபடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் திடீரென மந்தீப் சிங் களமிறக்கப்பட்டார். அவர் பவர்பிளே ஓவரில் 14 பந்துகளுக்கு 15 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டாகி வெளியேறினார். பவர் பிளேயில் கெயில் களமிறங்கியிருந்தால் மும்பை பந்துவீச்சாளர்களின் பந்துகளை வெளுத்து வாங்கி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பந்து வீச்சிலும் பஞ்சாப் அணியினர் வேண்டுமென்றே சுமாராக பந்து வீசியது போல் தான் இருந்தது. ஹர்திக் பாண்டியாவுக்கு ஷமி வீசிய 19வது ஓவரில் இரண்டு பவுண்ட்ரிகள் மற்றும் ஒரு சிக்சர் என 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 20ஆவது வேலை இல்லாமல் செய்துவிட்டது என்பது பஞ்சாப் அணி விட்டுக்கொடுத்தது என்பதை உறுதி செய்வதாக விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை அணி நேற்று தோல்வியடைந்திருந்தால் தொடரில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் மும்பை அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே வேண்டுமென்றே பஞ்சாப் அணி விட்டுக் கொடுத்தது போல் தெரிந்ததாகவும் விமர்சகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் மும்பை அணி பிளே ஆப் சுற்றில் விளையாடிய நிலையில் இந்த தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை என்ற பெரிய அவமதிப்பாக இருக்கும் என்பதால் மும்பை அணிக்கு பஞ்சாப் அணி விட்டுக் கொடுத்தது என்று கூறப்படுகிறது.

கடைசி ஓவரில் 4 ரன் கூட எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தும் அளவுக்கு பந்துவீசும், ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவருக்கு முந்திய ஓவரிலேயே 16 ரன்களை ஷமி விட்டுக் கொடுக்கிறார் என்றால் கண்டிப்பாக இதில் ஏதோ பின்னணி இருக்கிறது என்றும் மேட்ச் பார்ப்பவர்களை ஐபிஎல் நிர்வாகத்தினர் முட்டாள் ஆக்குகின்றனர் என்றும் விமர்சகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version